Loading...
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்: தாய்மாமன் சீர் திட்டம் செப்.,15-இல் தொடக்கம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்.,15-இல் தொடக்கம்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்: தாய்மாமன் சீர் திட்டம் செப்.,15-இல் தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 02, 2026
07:53 am

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு, 'தாய்மாமன் சீர்' அளிக்கும் வகையில் இலவச தங்க மோதிரம் வழங்கும் புதிய நலத்திட்டம் பேரறிஞர் அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முறைப்படி தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெறத் தாய்மார்கள் தனியாக எந்தவொரு விண்ணப்பமும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளின் விவரங்களை அதிகாரிகளே நேரடியாக திரட்டி வருகின்றனர். கர்ப்பிணிகளின் ஸ்மார்ட் கார்டு, PICME எண், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் அடையாளச் சான்றுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனை சார்பில் வழங்கப்படும் டிஸ்சார்ஜ் சான்றிதழ் விவரங்களை இணைத்து ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கள நிலவரம்

பயனாளிகள் எண்ணிக்கை மற்றும் கள நிலவரம்

அரசு தலைமை மருத்துவமனைகளில் மட்டும் மாதந்தோறும் 500 முதல் 550 பிரசவங்கள் வரை நடைபெறுகின்றன.

நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரவுகளையும் சேர்த்து கணக்கிடுகையில், நேற்று வரை 11,500-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திட்டம் முறைப்படி தொடங்கும் நாளில், தகுதியான பயனாளிகளுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டு தங்க மோதிரங்கள் வழங்கப்படும் என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமும் குழந்தைகள் பிறந்து வருவதால், திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

பொதுசுகாதாரத் துறை அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் தரவுகள் அனைத்தும் உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT