NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல்
    இந்தியா

    தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல்

    தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல்
    எழுதியவர் Nivetha P
    Feb 03, 2023, 09:49 pm 1 நிமிட வாசிப்பு
    தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல்
    தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல்

    முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நினைவு மண்டபம் ஏற்கனவே கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு சென்னை மெரினாவில் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதாக கூறி அதற்கான கருத்துக்கேட்பு கூட்டமும் அண்மையில் நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் மனுத்தாக்கல் செய்தார். அதில் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இத்திட்டத்தின் மூலம் அதிகம் உள்ளது என்பதால் இதற்கு தடை விதிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் மத்திய அரசு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை விதிகளின் கீழ் இந்த திட்டத்துக்கு அனுமதியளிக்க தடை விதிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    பசுமை தீர்பாயத்தில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு

    இது குறித்த விசாரணை மீண்டும் நேற்று(பிப்.,3) நடந்த நிலையில், மத்திய,மாநில அரசுத்துறை சார்ந்த சுற்றுசூழல்துறை, மீன்வளத்துறை, கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் உள்ளிட்ட அரசுத்துறைகள் பதில் மனுத்தாக்கல் செய்ய கோரி உத்தரவிட்டது. இதனையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னத்திற்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் மனுவினை தற்போது தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், 'அனைத்து ஒப்புதல்களும் பெற்ற பிறகே கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள், இந்த நினைவு சின்னம் அமைக்கப்படக்கூடாது, மீறி அமைத்தால் இருந்த இடம் தெரியாமல் செய்துவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழக அரசு
    கருணாநிதி

    சமீபத்திய

    இந்திய இதிகாசங்களை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களில் பட்டியல் கோலிவுட்
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு அதிமுக
    காமெடியனாக அறிமுகம் ஆகி, ஹீரோவாக கெத்து காட்டும் நடிகர்கள் கோலிவுட்
    2023-இல் வெளியாகும் மாருதி மற்றும் ஹூண்டாய் டாடா கார்கள்! கார் உரிமையாளர்கள்

    தமிழக அரசு

    ஆவின் தயிர் பாக்கெட்டில் 'தஹி' என குறிப்பிட கூறிய உத்தரவை வாபஸ் பெற்ற ஒன்றிய அரசு மு.க ஸ்டாலின்
    தமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் எடப்பாடி கே பழனிசாமி
    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி கார்த்தி
    டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை கோலிவுட்

    கருணாநிதி

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த வாழ்க்கை பற்றி தெரியாத தகவல்கள் மு.க ஸ்டாலின்
    கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு தமிழக அரசு
    வரலாற்று பதிவு: மு.கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நாள் இன்று! வைரல் செய்தி
    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கடற்கரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023