LOADING...
74 ஆண்டுகால சாதனையை நோக்கித் தமிழகம்: மாலை 3 மணிக்கே 70% வாக்குப்பதிவு<span style="font-size: 1.5rem;" data-mce-style="font-size: 1.5rem;">!</span>
தமிழகத்தில் மாலை 3 மணிக்கே 70% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது

74 ஆண்டுகால சாதனையை நோக்கித் தமிழகம்: மாலை 3 மணிக்கே 70% வாக்குப்பதிவு!

எழுதியவர் Vasuki
Apr 23, 2026
06:10 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் காணாத ஒரு பிரம்மாண்ட எழுச்சியை இன்று மாநிலம் கண்டுள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 3 மணி நிலவரப்படி ஒட்டுமொத்த மாநிலத்திலும் 70.00% என்ற இமாலய இலக்கை எட்டிப் புதிய மைல்கல்லைப் படைத்துள்ளது. 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தின் மிக உயரிய வாக்குப்பதிவாக இது அமையக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

மாவட்ட வாரியான 'டாப்' பெர்ஃபார்மன்ஸ்

தலைநகர் மற்றும் பிற மாவட்டங்களின் நிலை

மாநிலத்தின் பல மாவட்டங்கள் 70 சதவீதத்தைக் கடந்து அதிரடி காட்டி வருகின்றன. ஈரோடு மாவட்டம் 75.61% வாக்குகளுடன் மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ளது. தருமபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் முறையே 74.68% மற்றும் 74.35% வாக்குப்பதிவுடன் 'ரெக்கார்டு பிரேக்' செய்துள்ளன. கொங்கு மண்டலத்தில் கோயம்புத்தூர் (71.16%) மற்றும் கள்ளக்குறிச்சி (71.11%) மாவட்டங்களும் 70 சதவீதத்தைக் கடந்துள்ளன. நகர்ப்புறங்களிலும், புறநகர் பகுதிகளிலும் 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் நண்பகல் வேளையிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். தலைநகரில் 68.13% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், செங்கல்பட்டு, அரியலூரில் முறையே 69.46% மற்றும் 68.97% எனச் சீரான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

கேம் சேஞ்சர்

2026 vs 2021

2021-ஆம் ஆண்டுத் தேர்தலில் மாலை 5 மணிக்கு எட்டப்பட்ட இலக்கை, இந்த முறை மதியம் 3 மணிக்கே தமிழகம் எட்டிப் பிடித்துள்ளது. இது ஆட்சியின் போக்கை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய 'கேம் சேஞ்சராக' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடிப்பதாலும், பல இடங்களில் இன்னும் மக்கள் வரிசையில் நிற்பதாலும், இறுதி நிலவரம் 80 சதவீதத்தைத் தாண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை எவ்விதபெரிய அசம்பாவிதங்களுமின்றி சுமூகமாக நடைபெற்று வரும் இந்தத் தேர்தல், தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைக்கப் போகிறது. ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, வரும் மே மாதம் வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Advertisement