தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த வாழ்க்கை பற்றி தெரியாத தகவல்கள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021ம்ஆண்டு மே 7ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். இவரது அரசியல் வாழ்க்கை பற்றி பலருக்கும். ஆனால் பலருக்கும் தெரியாத அவரது சொந்த வாழ்க்கை குறித்த சில தகவல்களை இந்த பதிவில் காண்போம் வாருங்கள். மு.க.ஸ்டாலின் அவர்கள் 1975ம்வருடம் தன்னுடைய 22வயதில் திருமணம் செய்துகொண்டார். முரசொலி மாறன் மூலம் அமைந்த இந்த சம்பந்தத்தில், பார்த்த முதல் பெண்ணையே பிடித்துப்போய் திருமணம் செய்துகொண்டு துர்கா ஸ்டாலினை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். ஸ்டாலினின் மகன்,மகள் இருவருமே காதல்திருமணம் செய்துகொண்டவர்கள். அதுவும் அவர்களது காதலை இவரிடம்தான் முதலில் கூறியுள்ளார்கள். 'முத்துவேல் கருணாநிதி என்னும் நான்' என்றுகூறி தான் பதவியேற்றத்தை கருணாநிதி பார்க்கமுடியாத காரணத்தினால் அடிக்கடி கருணாநிதி நினைவிடம் சென்று பார்த்து வருவாராம்.
பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேன், பெயரை மாற்ற மாட்டேன் - கருணாநிதி
கலைஞர் அவர்கள் இவரை ஸ்டாலின் என்றுதான் கூப்பிடுவாராம். ஸ்டாலின் என்னும் பெயரால் அப்போது இருபாலரும் படிக்கக்கூடிய சர்ச் பார்க் பள்ளியில் இவருக்கு சீட் கிடைக்கவில்லையாம். பெயரை மாற்றினால் சீட் கிடைக்கும் என்றுகூறிய நிலையில், கருணாநிதி அதனை மறுத்துவிட்டாராம். ஸ்டாலினுக்கு துர்கா சமைக்கும் மீன்குழம்பு மிகவும் பிடிக்குமாம். மற்றபடி அதிகப்பயணம் செய்வதால் செரிமான பிரச்சனை இல்லாமல்இருக்க சைவத்தையே விரும்பிசாப்பிடுவாராம். இவர் கட்சிரீதியாக எங்கு சென்றாலும் கருணாநிதி இவரை போன் மூலம் தொடர்புகொண்டு கட்சிப்பணிகள் குறித்து பேசுவாராம். அதேவழக்கத்தை தற்போது உதயநிதியிடம் இவர் தொடர்கிறார். இவர் சாப்பிடும்போது போன்பேசுவதும், வேலைகள் குறித்து யோசிப்பதும் துர்காஸ்டாலினுக்கு பிடிக்காதாம். ஸ்டாலினுக்கு ஸ்கூட்டர் ஓட்ட மு.க.அழகிரி தான் கற்றுக்கொடுத்துள்ளார். முதன்முதலில் அவர் ஓட்டுகையில் கீழே விழுந்து கையை உடைத்து கொண்டாராம்.