Loading...
முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த மேற்குவங்க MP சயோனி கோஷ்: பின்னணி என்ன?
சயோனி கோஷ், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார்

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த மேற்குவங்க MP சயோனி கோஷ்: பின்னணி என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 02, 2026
10:36 am

செய்தி முன்னோட்டம்

மேற்குவங்க மாநிலத்தின் ஜாதவ்பூர் மக்களவை தொகுதி உறுப்பினரும் பெங்காலி நடிகையுமான சயோனி கோஷ், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேசியுள்ள சம்பவம் தற்போதைய அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. 2021 ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சயோனி கோஷ், கட்சியின் இளைஞரணித் தலைவராகப் பணியாற்றியவர். 2024 மக்களவைத் தேர்தலில் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்பியாக உயர்ந்தார். 2026 மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய அரசியல் சூழலில், திரிணாமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்கள் குழுவில் இணைந்து தனியாக செயல்பட மக்களவை சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளார்.

சந்திப்பு

முதலமைச்சர் விஜய் உடனான சந்திப்பு

தற்போது பாஜக ஆதரவு நிலைப் பாட்டைக் கொண்டுள்ள சயோனி கோஷ், தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல், ஒருங்கிணைந்த வளர்ச்சி, புதிய வாய்ப்புகள் மற்றும் சிறந்த நிர்வாகம் குறித்து ஆலோசித்ததாகவும், மேற்குவங்க கலாச்சாரத்தின் மீது முதலமைச்சர் விஜய் வைத்துள்ள மரியாதையை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

சலசலப்பு

காங்கிரஸ் கூட்டணி வட்டாரங்களில் சலசலப்பு

தமிழகத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் இருக்கும் நிலையில், பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஒரு எம்பி தமிழக முதலமைச்சரை சந்தித்திருப்பது அரசியல் ரீதியாக பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

அடுத்த பிரதமருக்கான ரேஸில் விஜய்க்கு ஆதரவு எனத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இந்தச் சந்திப்பை எப்படி அணுகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஜய்யின் தொலைநோக்கு சிந்தனைகளுக்கு சயோனி கோஷ் வாழ்த்து தெரிவித்துள்ள போதிலும், இந்தச் சந்திப்பின் உண்மையான அரசியல் உள்நோக்கம் என்ன என்பது குறித்துப் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT