
திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி - சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு
செய்தி முன்னோட்டம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி தினம் மிகச்சிறப்பாக நடைபெறும்.
பக்தர்கள் அங்கு ஒன்றுக்கூடி கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
எனினும் ஆண்டுக்கு ஒருமுறை வரும் சித்ரா பவுர்ணமி மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
லட்சக்கணக்கில் பக்தர்கள் அன்றைய தினம் இங்கு வருகைத்தருவார்கள் என்பதால் மே மாதம் 5ம்தேதி வரும் சித்ரா பவுர்ணமியினையொட்டி 6 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதன்படி சென்னை, திருப்பத்தூர், கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், மதுரை, கடலூர், புதுச்சேரி போன்ற பல பகுதிகளில் இருந்து 6,000 சிறப்பு பேருந்துகள் வரும் மே 4 மற்றும் 5 தேதிகளில் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
திருவண்ணாமலைக்கு மே 4, 5-ந் ஆகிய தேதிகளில் 6 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
— Maalai Malar தமிழ் (@maalaimalar) April 26, 2023
மேலும் படிக்க : https://t.co/OBfpEhiEtS#Tiruvannamalai #Annamalaiyartemple #Specialbuses #TNGovt #MMNews #Maalaimalar pic.twitter.com/DDV4fikJeN