திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது
செய்தி முன்னோட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில், அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 72.50 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான ஆரிப்(35) மற்றும் ஆசாத் ஆகியோரை ஹரியானாவில் வைத்து தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இதில் சம்பந்தப்பட்ட மேலும் 2 வடமாநில கொள்ளையர்கள் அரியானாவில் உள்ளதாக தெரியவந்தது.
அவர்களை பிடிக்க விரைந்த தனிப்படை போலீசார் கர்நாடகா மாநிலம் கோலாரில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் குர்திஷ் பாஷா மற்றும் அஷ்ரப் உசேன் ஆகியோரை கைது செய்தனர்.
இதன் படி இந்த வழக்கில் இதுவரை 9 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது
கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் இருந்து ரூ.15 லட்சம் பறிமுதல்
அதனை தொடர்ந்து ரூ.20 லட்சம் ரொக்கம், 3 கார்கள், 1 கண்டெய்னர் லாரி உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான ஆசிப் ஜாவேத் அரியானா, ராஜஸ்தான் இடையேயான எல்லையில் ஆரவல்லி மலைப்பகுதியில் பல சவால்களுக்கு மத்தியில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கியிருந்த ஆசிப் ஜாவேத்'தை துப்பாக்கி முனையில் தமிழக போலீசார் கைது செய்துள்ளார்கள்.
அவரிடமிருந்து ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியினை பிடித்த தனிப்படைக்கு டிஜிபி சைலேந்திர பாபு ரூ.1 லட்சம் வெகுமதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.