
புதுச்சேரி கதிர்காமம் திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா
செய்தி முன்னோட்டம்
புதுச்சேரி மாநிலத்தில் கதிர்காமம் பகுதியில் உள்ளது பிரசித்திப்பெற்ற திரெளபதி அம்மன் கோயில்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ திருவிழா தவறாமல் நடத்தப்படும்.
அதன்படி இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 5ம் தேதியே கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதன்படி தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டு வீதி உலா நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து ஊரணி பொங்கல், பால் கஞ்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் விழாவின் முக்கிய அம்சமாக பால், இளநீர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பலவித பொருட்கள் கொண்டு அபிஷேகங்களும் அம்மனுக்கு சிறப்பாக நடத்தப்பட்டது.
தீ மிதி
100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தீ மிதித்தனர்
இவற்றையடுத்து 10 நாள் பாரதம் படிக்கப்பட்டு அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதனை தொடர்ந்து, சிறப்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திரெளபதி அம்மன் தன்னுடைய சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களை பரவசம் அடைய செய்தார்.
அதன் பின்னரே திருவிழாவின் மிக முக்கியமான தீமிதி நடைபெற்றது.
தீ மிதிக்கும் இடத்திற்கு திரெளபதி அம்மன் பச்சை பட்டு உடுத்தி வந்த நிலையில், பக்தர்கள் தீ மிதிக்க ஆரம்பித்தனர்.
மிக சிறப்பாக இந்த தீ மிதி நிகழ்வு பக்தி பரவசத்தோடு அரங்கேறியது.
இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.