Page Loader
மும்பை BMW விபத்து: குற்றவாளி மது அருந்திய மதுக்கடைக்கு சீல் 

மும்பை BMW விபத்து: குற்றவாளி மது அருந்திய மதுக்கடைக்கு சீல் 

எழுதியவர் Sindhuja SM
Jul 09, 2024
02:38 pm

செய்தி முன்னோட்டம்

மும்பை BMW விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மிஹிர் ஷா மது அருந்திய வைஸ் குளோபல் தபாஸ் பார்க்கு கலால் துறை சீல் வைத்துள்ளது. இந்த வழக்கு குறித்து 2 நாள் விசாரணை நடத்தப்பட்டதில், கலால் துறை விதிகளை அந்த பார் மீறியது தெரியவந்ததையடுத்து அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மும்பையின் வோர்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு பைக்கை BMW கார் மோதியதால் ஒரு பெண் உயிரிழநதார். இந்த காரை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் தலைவர் ஒருவரின் மகன் மிஹிர் ஷா ஓட்டியதாக கூறப்படுகிறது. அவர் குடிபோதையில் காரை ஓட்டி சென்று ஒரு பைக்கின் மீது மோதியதில், அதில் இருந்து ஒரு பெண் உயிரிழந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

குற்றவாளி மது அருந்திய மதுக்கடைக்கு சீல்