கோவை ஈஷாவில் 'தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழா' கோலாகல கொண்டாட்டம்
செய்தி முன்னோட்டம்
கோவை ஈஷா மையத்தில் வாழ்வியலுடன் தொடர்புகொண்ட அம்சங்களை கொண்டாட்டங்கள் மூலம் புதுப்பிக்கும் மற்றும் புத்துணர்வூட்டும் வகையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக இந்த 'தமிழ் தெம்பு-தமிழ் மண் திருவிழா' நடைபெற்றது.
இந்த திருவிழாவில் தினமும் மாலை நேரங்களில் ஆதியோகி முன்பு வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் பறையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், சலங்கை ஆட்டம், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றது.
மேலும் ஈஷாவில் பிரம்மச்சாரியாக இருக்கும் சுவாமி அதிந்திரா அவர்கள் நாயன்மார்களின் கதைகளையும், தேவார பாடல்கள் இயற்றப்பட்ட வரலாற்றுக்களையும் பொதுமக்களுக்கு எளிதாக புரியும் வகையில் கதை சொல்லும் நிகழ்வும் நடந்தது.
நெல் ரகங்களின் கண்காட்சி
தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற தின்பண்டங்கள் விற்பனை
அதன் பின்னர் ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி மாணவர்கள் களரி பயட்டும் செய்து காட்டினார்.
இதனை தொடர்ந்து, ஆதியோகி திவ்ய தரிசனம், மகா ஆரத்தி, தொன்மையான கைலாய வாத்தியம் ஆகியவை தினமும் நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த திருவிழாவில் 'மண் காப்போம்' இயக்கம் சார்பில் பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி, நூற்பு கைத்தறி நெசவு சமூகத்தின் கைத்தறி ஆடைகள் கண்காட்சி மற்றும் விற்பனை,
தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மேக்கருன், மணப்பாறை முறுக்கு போன்ற கிராமிய உணவு பண்டங்களின் விற்பனையும், தேன் விற்பனையும் இங்கு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.