LOADING...
தமிழக மக்களுக்கு ஜாக்பாட்! பொங்கல் பரிசாக ரூ.3,000 ரொக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
பொங்கல் பரிசாக ரூ.3,000 ரொக்கம் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு

தமிழக மக்களுக்கு ஜாக்பாட்! பொங்கல் பரிசாக ரூ.3,000 ரொக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jan 04, 2026
12:55 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக மக்கள் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கப்பரிசு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ரூ.3,000 நேரடியாகக் குடும்பத் தலைவர்களின் வங்கிக் கணக்கில் அல்லது கையில் வழங்கப்படும். மேலும், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு ஆகியவை வழங்கப்படும். கூடுதலாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி மற்றும் சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பயனாளிகள்

பொங்கல் பரிசு பயனாளிகள் விவரம்

இத்திட்டத்தின் மூலம் சுமார் 2,22,91,710 குடும்பங்கள் பயன்பெற உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் இதனால் பலன்பெறும். பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசுக்காக மொத்தம் ரூ.6,936 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே நியாயவிலைக் கடைகள் வழியாக இந்தப் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்கப்படும். இதற்கான டோக்கன்கள் விரைவில் விநியோகிக்கப்படும்.

நோக்கம்

முதல்வரின் நோக்கம்

உழவர்களின் உழைப்பிற்கு நன்றி கூறும் பாரம்பரிய விழாவான பொங்கலை, ஏழை எளிய மக்கள் எவ்விதச் சிரமமுமின்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ரொக்கப்பரிசு உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு ரொக்கப்பரிசுத் தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement