பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்: அரையாண்டுத் தேர்வு விடுமுறை 12 நாட்களாக நீட்டிக்க வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. வெளியாகியுள்ள தகவலின்படி, மாணவர்களுக்குத் தேர்வு விடுமுறையை டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரை வழங்கப் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தேர்வு
தேர்வு அட்டவணை
10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 10 முதல் 23 ஆம் தேதி வரையிலும், 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 ஆம் தேதி வரையிலும் அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுகள் டிசம்பர் 23ஆம் தேதி முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அரையாண்டுத் தேர்வு விடுமுறை டிசம்பர் 24 ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் மற்றும் ஜனவரி 1 அன்று புத்தாண்டு என அடுத்தடுத்தப் பண்டிகைகள் வருகின்றன. முன்னதாக, ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கல்வி நாட்காட்டியில் ஜனவரி 2 விடுமுறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
12 நாட்கள்
தொடர்ந்து 12 நாட்கள்
ஜனவரி 3 மற்றும் 4ஆம் தேதிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாக வருவதால், விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரை எனத் தொடர்ந்து 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, ஜனவரி 5 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.