தமிழகத்தில் 50 ஆயிரம் புதிய விவசாய மின் இணைப்புகள்: ரூ.750 கோடியில் அரசாணை வெளியீடு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் 2026-2027-ஆம் நிதியாண்டில் 50 ஆயிரம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. விவசாயிகளின் பாசனத் தேவைகளை நிறைவு செய்யவும், வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும் இந்த முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு விவசாய மின் இணைப்புக்கு சராசரியாக ரூ.1.5 லட்சம் வீதம், புதிய இணைப்புகள் வழங்குதல் மற்றும் அதற்கான மின் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மொத்தம் ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாய மின் இணைப்புகளுக்காக ஆண்டுதோறும் ரூ.127.56 கோடியை மின்சார மானியமாக அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகள்
பிரிவு வாரியாக ஒதுக்கீடு விவரங்கள்
அரசாணையின்படி சாதாரணப் பிரிவில் 20,000, தட்கல் முறையில் 25,282, சுயநிதிப் பிரிவில் 3,372, சிறப்புப் பிரிவில் 3,215 மற்றும் நலத்திட்டங்களின் கீழ் 1,346 எனப் புதிய விவசாய மின் இணைப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே வழங்கப்பட்ட 7,313 இணைப்புகளுடன் சேர்த்து மொத்தம் 50,000 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், விவசாய இணைப்புகள் வணிக ரீதியாகத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்துத் தீவிர கள ஆய்வு நடத்தி, விதிமீறல் உள்ள இணைப்புகளை உடனடியாகத் துண்டிக்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் தகுதியுள்ள உண்மையான விவசாயிகளுக்கு மட்டுமே அரசின் மின்சாரச் சலுகைகள் முழுமையாகச் சென்றடைவது உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.