Loading...
கோயில் அறங்காவலர் தேர்வுக்குழுவில் சினிமா தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி: தவெக அரசின் புதிய அரசாணை
கோயில் அறங்காவலர் தேர்வுக்குழுவில் சினிமா தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

கோயில் அறங்காவலர் தேர்வுக்குழுவில் சினிமா தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி: தவெக அரசின் புதிய அரசாணை

எழுதியவர் Venkatalakshmi V
Aug 10, 2026
02:45 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், பல்வேறு துறைகளிலும் புதிய நிர்வாகப் பொறுப்புகளுக்கான நியமனங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசின் மேலிட பிரதிநிதியாக 'ஜனநாயகன்' திரைப்படத் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது பழைய செய்தி. அதேபோல தற்போது மற்றுமொரு சினிமா பிரபலமும், விஜய்க்கு நெருக்கமானவராக அறியப்படும் மற்றுமொரு தயாரிப்பாளருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு இந்து சமய அறநிலையத் துறையின் மாநில அளவிலான குழுவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அறங்காவலர் குழு

கோயில் அறங்காவலர் குழு தேர்வுக்கான மாநிலக்குழு

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆளுகைக்குட்பட்ட, ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு மேல் உள்ள திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்யத் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்க மாநில அளவிலான சிறப்புக் குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இயங்கி வந்த மாநிலக் குழுவின் பதவிக்காலம் கடந்த 2026 ஜூலை 24 அன்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் பரிந்துரையை ஏற்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநிலக்குழுவின் தலைவராக தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் (மயிலம் பொம்மபுர ஆதீனம்), மற்றும் துணைத் தலைவராக K. இராமநாதன் (ஓய்வுபெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

பதவிக்காலம்

குழுவின் பதவிக்காலம்

சட்டப்பிரிவு 46(1)-ன் கீழ் பிரசுரம் செய்யப்பட்டுள்ள முக்கியமான திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் பணிக்கு இக்குழு முழுப் பொறுப்பேற்கும்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மாநிலக் குழுவின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT