தமிழக தேர்தல் முடிவுகள் 2026: மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த நிலையில் மகன் உதயநிதி ஸ்டாலின் போராடி வெற்றி
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவர் தவெக வேட்பாளர் டி.செல்வத்தை விட சுமார் 11,000 வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றுள்ளார். ஆளும்கட்சியான திமுக இந்த தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக எழுச்சி பெற்றுள்ளது. மேலும், கொளத்தூர் தொகுதியில் தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்துள்ளது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளது திமுகவினருக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது. இதற்கிடையே, திமுகவின் கோட்டை என எப்போதும் வர்ணிக்கப்படும் சென்னை பகுதியில், ஒரே ஒரு தொகுதியாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#ElectionUpdate | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி #DMK | #UdhayanidhiStalin | #ElectionResults | #TNElectionResults | #TNAssemblyElections | #TNElections | #DailyThanthi pic.twitter.com/sYhtzbqzO2
— DailyThanthi (@dinathanthi) May 4, 2026