கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில் சேவை
மேட்டுப்பாளையம்- குன்னூர்- ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயிலுக்கு சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பு எப்போதுமே உண்டு. இந்த ரயில் சேவை எழில்கொஞ்சும் மலைகளுக்கு இடையே பயன்படுவதாலும், ரயிலின் நூறாண்டு கடந்த பரம்பரியத்தினாலும் அதற்கென மவுசு இன்றும் உள்ளது. இந்த நிலையில் வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சிறப்பு மலை ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம்- உதகை, உதகை-குன்னூர், கேத்தி-உதகை ஆகிய வழித்தடங்களுக்கு இடையே சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ரயில் சேவை, டிசம்பர் 28 துவங்கி, ஜனவரி 2 வரை, 6 நாட்களுக்கு குன்னூர்-உதகை இடையே பகல் நேரத்தில் இந்த ரயில் இயக்கப்படும்.