Page Loader
கூகுள் பே பயனர்களுக்கு இலவசகமாக வந்த பணம் - எப்படி தெரியுமா? 
கூகுள் பே பயனர்களுக்கு இலவசமாக பணம் வந்துள்ளது

கூகுள் பே பயனர்களுக்கு இலவசகமாக வந்த பணம் - எப்படி தெரியுமா? 

எழுதியவர் Siranjeevi
Apr 12, 2023
11:35 am

செய்தி முன்னோட்டம்

நவீன டிஜிட்டல் மையம் வளர்ந்ததில் இருந்து, பலரும் யுபிஐ மூலம் பேமெண்ட்களை அனுப்பு வருகின்றனர். அதில், கூகுள் பே, போன் பே மற்றும் பேஎடிஎம் போன்ற செயலிகள் முன்னணியில் உள்ளது. இதனிடையே, இச்செயலியின் மூலம் நபர் ஒருவருக்கு 88,000 ரூபாய் இலவசமாக வந்துள்ளதாக சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார். கூகுள் பே நிறுவனம் தற்போது ஒரு புதிய பரிவர்த்தனை சேவையை சோதனை செய்து வருகிறது. இச்சேவை இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை இருப்பினும் கூகுள் ஊழியர்கள் மத்தியில் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்த சோதனையின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல்வேறு நபர்களுக்கு பல வகையான தொகைகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

details

கூகுள் பே பயனர்களுக்கு இலவசமாக 80,000 ரூபாய் வரை பணம் வந்துள்ளது 

எனவே இந்த சோதனையின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல்வேறு நபர்களுக்கு பல வகையான தொகைகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதில் ஒருவருக்கு மட்டுமே ரூ.88,000 தொகை வந்துள்ளது. மேலும் எத்தனை பேருக்கு இப்படி பணம் அனுப்பட்டுள்ளது என தெரியவில்லை. ஆனால், செலுத்தப்பட்ட தொகை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. அப்படி ஒரு வேளை அந்த முயற்சி தோல்வியடைந்தால் பயனர்களே அந்த பணத்தை வைத்துக்கொள்ளலாம் என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் கூகுள் பிக்சல் போன் வைத்திருப்பவர்களுக்கு பணம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.