LOADING...
தமிழக மக்களே அலெர்ட்: SIR காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு! புதிய தேதி இதுதான்
தமிழகத்தில் SIR படிவம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு

தமிழக மக்களே அலெர்ட்: SIR காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு! புதிய தேதி இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 11, 2025
05:16 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியத் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளைச் சரிசெய்யும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கான (SIR) காலக்கெடுவை தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டித்துள்ளது. SIR கணக்கீட்டுப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் திருத்தப்பட்ட தேதிகள் பின்வருமாறு: தமிழகம் மற்றும் குஜராத்திற்கு படிவம் சமர்ப்பிப்பதற்கான புதிய இறுதித் தேதி டிசம்பர் 14 மற்றும் வரைவுப் பட்டியல் வெளியாகும் புதிய தேதி டிசம்பர் 19 ஆகும். மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு படிவம் சமர்ப்பிப்பதற்கான புதிய இறுதித் தேதி டிசம்பர் 18 மற்றும் வரைவுப் பட்டியல் வெளியாகும் புதிய தேதி டிசம்பர் 23 ஆகும்.

நீட்டிக்கப்படாத மாநிலங்கள்

காலக்கெடு நீட்டிக்கப்படாத மாநிலங்கள்

உத்தரப்பிரதேசத்திற்கு படிவம் சமர்ப்பிப்பதற்கான புதிய இறுதித் தேதி டிசம்பர் 26 மற்றும் வரைவுப் பட்டியல் வெளியாகும் புதிய தேதி டிசம்பர் 31 ஆகும். கோவா, லட்சத்தீவுகள், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் SIR படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு எந்த நீட்டிப்பும் இன்றி, இன்றுடன் (டிசம்பர் 11) முடிவடைந்தது. SIR படிவங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய தமிழக வாக்காளர்கள், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படுவதைத் தவிர்க்க, நீட்டிக்கப்பட்ட டிசம்பர் 14க்குள் படிவங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், புதிய வாக்காளர் வரைவுப் பட்டியல் டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement