Page Loader
நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

எழுதியவர் Sindhuja SM
Oct 09, 2023
09:15 am

செய்தி முன்னோட்டம்

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட அமலாக்கத்துறை, கடந்த ஆகஸ்ட் 12ம்தேதி சுமார் 3,000-பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கிடையில், சென்னை முதன்மை நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13ஆம் தேதி வரை நீடித்தது. அப்போது, 7வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி