திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது
செய்தி முன்னோட்டம்
திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது.
வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் உருவாகியுள்ளதாக முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால், காங்கிரஸ் அதை முற்றிலுமாக மறுத்துள்ளது.
எந்த பட்டியலையும் தயாரிக்கவும் இல்லை, திமுகவிடம் கொடுக்கவும் இல்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
2019 மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 53 சதவீத வாக்குகளுடன் 38 இடங்களில் வென்றது.
டக்லவ்க்ம்
திமுக குழுவை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்
அப்போது, அதிமுக 1 இடத்தை கைப்பற்றியது. திமுக போட்டியிட்ட 20 இடங்களிலும் வற்றி பெற்றது. காங்கிரஸ் 9 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வென்றது. மற்ற கூட்டணிக் கட்சிகள் மற்ற இடங்களையும் கைப்பற்றின.
இந்நிலையில், மாநில தலைவர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
தொகுதி பங்கீடு குறித்து பேசிய திமுக தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் மனதில் என்ன இருக்கிறது என்று எங்களுக்கு தெரியாது. தமிழகத்தில் கூட்டணி பலமாக உள்ளதால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றார்.