நாளை தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் மின்தடை! மின்சார வாரியம் அவசர அறிவிப்பு!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு மத்தியில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) தற்பொழுது மாநிலத்தின் மிக முக்கிய மாவட்டங்களுக்கான அவசர மின் பராமரிப்புப் பணிகளை அசுர வேகத்தில் கையில் எடுத்துள்ளது. நாளை (ஜூன் 9, செவ்வாய்க்கிழமை) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை (சில பகுதிகளில் மதியம் 2:00 மற்றும் மாலை 4:00 மணி வரை) மின்சார வாரிய துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, தமிழகத்தின் பல முக்கிய வட்டாரங்களில் நாளை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை மின்தடை ஏற்படும் முக்கிய மாவட்டங்கள் மற்றும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கரூர் மாவட்டம் (காலை 09:00 - மாலை 05:00): சின்னபனையூர் துணை மின்நிலையம்: சின்னபனையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள். புலியூர் துணை மின்நிலையம்: புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், சனப்பிராட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, நற்காட்டியூர், தொழிற்பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலாப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடம்மங்கலம், லட்சுமணம்பட்டி, போரணி வடக்கு. கோவை மற்றும் மேட்டுப்பாளையம் வட்டாரம் (காலை 09:00 - மாலை 04:00): பவானி பேரெஜ் துணை மின்நிலையம்: தெக்கம்பட்டி, நஞ்சேகவுண்டன்புதூர், சுக்குக்காப்பிக் கடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, கெந்தப்பாளையம், தோடதாசனூர், ராமையகவுண்டன்புதூர், உப்புப்பள்ளம். தேவராயபுரம் துணை மின்நிலையம்: தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டையாம்பாளையம், தென்றல் நகர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கவுண்டம்பாளையம் துணை மின்நிலையம்: அவினாசி திட்டம் (24 மணி நேரக் குடிநீர் விநியோகப் பகுதி), ஹவுசிங் போர்டு, ஏ.ஆர் நகர், தாமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர். பெரியநாயக்கன்பாளையம் துணை மின்நிலையம்: பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காலிபாளையம், பூச்சியூர், சாநாயக்கன்பாளையம், ஆத்திப்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம். மாதம்பட்டி துணை மின்நிலையம்: மாதம்பட்டி, ஆலந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர் செட்டிபாளையம். மருதூர் துணை மின்நிலையம்: தோளம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தயானூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்காரம்பாளையம், காரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், காலாட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
புதுக்கோட்டை மாவட்டம் (காலை 09:00 - மாலை 04:00): நகரப்பட்டி துணை மின்நிலையம்: நகரப்பட்டி பகுதி. குளத்தூர் (அம்மாசத்திரம்) துணை மின்நிலையம்: குளத்தூர் முழுப் பகுதி (காலை 8:00 மணி முதல்). பாக்குடி, இலுப்பூர், மாத்தூர், விராலிமலை, கொன்னையூர், மேலத்தானியம் ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட ஒட்டுமொத்த சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் இருக்காது. திண்டுக்கல் மற்றும் பழனி வட்டாரம் (காலை 09:00 - மதியம் 02:00): பழனி துணை மின்நிலையம்: பழனி டவுன், மானூர், நெய்க்காரப்பட்டி, அடிவாரம், ஆயக்குடி, பூலாம்பட்டி. ரெட்டியார்சத்திரம் துணை மின்நிலையம்: ரெட்டியார்சத்திரம், செம்மாட்டிபட்டி, பழங்கானூத்து. மினுக்கம்பட்டி துணை மின்நிலையம்: குட்டம், மினுக்கம்பட்டி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை (காலை 09:00 - மாலை 05:00): வாய்மேடு துணை மின்நிலையம்: ஆலங்காடு, கரியப்பட்டினம், ஆயக்காரன்புலம் (மருதூர்). ஆயக்காரன்புலம் துணை மின்நிலையம்: கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், கோவில்குளம். நீடூர் துணை மின்நிலையம்: கங்கணம்புத்தூர், அருவாபாடி, மொழையூர். திருவண்ணாமலை மற்றும் வேலூர்: சமுத்திரம் துணை மின்நிலையம்: சமுத்திரம், கீழ்சிறுபாக்கம், மெய்யூர், காந்திபுரம், தேனிமலை, அண்ணா நகர், சாந்திமலை, அதியந்தல். விண்ணவனூர் துணை மின்நிலையம்: விண்ணவனூர், சீராந்தாங்கல், ஜப்திகாரியந்தல், நரசிங்கநல்லூர், குப்பந்தாங்கல், கோட்டக்குளம், விண்ணவூர் தொழிற்பேட்டை, ஆவின் பகுதி. சேத்பட் துணை மின்நிலையம்: சேத்பட், இந்திரவனம், ஆனந்திமங்கலம், உலகம்பட்டு, ஆப்பேடு. சாதுமதுரை துணை மின்நிலையம்: அடுக்கம்பாறை, துதிப்பட்டு, குலவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னப்பாளையம், சோழவரம் மற்றும் சாதுமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தருமபுரி மற்றும் இதர மாவட்டங்கள்: ராமியானஹள்ளி துணை மின்நிலையம்: ராமியானஹள்ளி, சிந்துல்பாடி, பூதனத்தம், நாவலை, ஆண்டிப்பட்டி, ராமாபுரம், கடத்தூர், ரேகடஹள்ளி, புட்டி ரெட்டிப்பட்டி, நாதனெடு. பொம்மிடி துணை மின்நிலையம்: பொம்மிடி, சொரக்காய்ப்பட்டி, பண்டாரதெட்டிப்பட்டி, வத்தல்மலை, தாளநத்தம், திப்பிரெட்டிஹள்ளி, வாசிகவுண்டனூர், வேப்பிலைப்பட்டி, அஜம்பட்டி. ஈரோடு (விஜயமங்கலம்): பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கிரே நகர், கைகாட்டிபாளையம், வடமலைக்கவுண்டன்பாளையம், பச்சைக்கவுண்டன்பாளையம், கிணிபாளையம், கரட்டூர், பாப்பம்பாளையம். தஞ்சாவூர் (ஒரத்தநாடு & மணிமண்டபம்): ஒரத்தநாடு 11KV பகுதி மற்றும் மணிமண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகள் (மதியம் 3:00 மணி வரை). நாளை மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் பகுதிகளிலுள்ள பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான அத்தியாவசியக் குடிநீர் மற்றும் மின் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுத் தயார் செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு மின்சாரவாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.