LOADING...
நாளை தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் மின்தடை: மின்சார வாரியம் அறிவிப்பு!
நாளை தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் மின்தடை: மின்சார வாரியம் அறிவிப்பு!

எழுதியவர் Vasuki
Jun 10, 2026
01:57 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மாதந்தோறும் மின்சார வாரியம் சார்பில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாளை வியாழக்கிழமை (ஜூன் 11, 2026) தமிழகத்தின் பல்வேறு முக்கிய மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளை மின் தடை அறிவிக்கபட்டிருக்கும் மாவட்டங்கள், துணை மின் நிலையங்கள் மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:

மின்தடை

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி வட்டாரம் (காலை 09:00 - மாலை 04:00): சமத்தூர் துணை மின்நிலையம்: சமத்தூர், ஆவல்கிணத்துப்பாளையம், தளவாய்ப்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பூச்சியூர், பில்சின்னாம்பாளையம், ஜமீன் கோட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சேரி, நம்பிமுத்தூர், பத்தநாயக்கனூர், சுண்டக்காம்பாளையம். பீளமேடு துணை மின்நிலையம்: பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழில்துறை எஸ்டேட், ஆவாரம்பாளையம், இராமநாதபுரம், கல்லிமடை, திருச்சி ரோடு (ஒரு பகுதி), மீனா எஸ்டேட், உடையாம்பாளையம். கோவில்பாளையம் துணை மின்நிலையம்: சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மணிக்காம்பாளையம், அக்ரஹார சாமக்குளம், கொண்டையாம்பாளையம், குன்னத்தூர், காளிப்பாளையம், மொண்டிகாளிபுதூர்.

மின்தடை

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

அரியலூர் மற்றும் பெரம்பலூர் வட்டாரம் (காலை 09:00 - மதியம் 02:00): கூத்தூர் துணை மின்நிலையம்: அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல் (தொழிற்பேட்டை பகுதி), பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர், குளத்தூர் 01, சில்லாக்குடி 02, திம்மூர் 03. வெண்மணி துணை மின்நிலையம்: மேலமாத்தூர், வெண்மணி, நல்லரிக்கை, புதுக்குடிசை. கீழப்பழுவூர் துணை மின்நிலையம்: கீழப்பழுவூர், பொய்யூர் வாட்டர்வொர்க்ஸ் (குடிநீர் வாரியப் பகுதி), கோக்குடி.

Advertisement

மின்தடை

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் (காலை 09:00 - மதியம் 02:00): கொடைக்கானல் துணை மின்நிலையம்: கொடைக்கானல் மலைப் பகுதிகள் முழுவதும். கண்ணிவாடி துணை மின்நிலையம்: கண்ணிவாடி, மாநகரை, நீலமலைக்கோட்டை, தருமத்துப்பட்டி. நிலக்கோட்டை துணை மின்நிலையம்: நிலக்கோட்டை டவுன், நூதலாபுரம். நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை (காலை 09:00-மாலை 05:00): வேதாரண்யம் துணை மின்நிலையம்: வேதாரண்யம் டவுன், கோடியக்கரை, தோப்புத்துறை, மறைஞாயநல்லூர், தேத்தாகுடி. வைதீஸ்வரன்கோவில் துணை மின்நிலையம்:சீர்காழி 1 & 2, வைதீஸ்வரன்கோவில், திருப்புன்கூர், ஆத்துக்குடி. அரசூர் துணை மின்நிலையம்: மாத்திரவேளூர், வாட்டர்வொர்க்ஸ், திருமுல்லைவாசல், எம் ஆர் எம், பூம்புகார். எடமணல் துணை மின்நிலையம்: கூழையார், திட்டை, தொடுவாய், திருக்கருகாவூர், கூட்டுக்குடிநீர் திட்டம். பெரம்பூர் துணை மின்நிலையம்: பெருஞ்சேரி, ஆத்தூர், சேத்தூர், கடக்கம்.

Advertisement

மின்தடை

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் வட்டாரம் ஆதனக்கோட்டை துணை மின்நிலையம்: ஆதனக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும். கந்தர்வக்கோட்டை துணை மின்நிலையம்: கந்தர்வக்கோட்டை நகரம் மற்றும் புதுப்பட்டி ஒட்டுமொத்த சுற்றுவட்டாரப் பகுதிகள். மங்களக்கோவில் மற்றும் குன்னண்டார்கோவில்: மங்களக்கோவில் மற்றும் குன்னண்டார்கோவில் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளும். உரணிபுரம் மற்றும் ஈச்சங்கோட்டை: உரணிபுரம் 33Kv மற்றும் ஈச்சங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும். திருவண்ணாமலை மாவட்டம்: போளூர் துணை மின்நிலையம்: போளூர், ஆரியத்தூர், ரெண்டாம், பெருங்கப்பாக்கம். மங்கலம் துணை மின்நிலையம்: மங்கலம், மாடலாம்பாடி, வேதாந்தவாடி, ஆர்ப்பாக்கம், கழிகுளம், நூக்கம்பாடி, ஏகேசிடி மில், பாலாந்தல். கஞ்சி துணை மின்நிலையம்: கஞ்சி, மேல்நாச்சிப்பட்டு, புதுப்பட்டு, ஆனந்தல், குப்பம், அரசந்தாங்கல், கலாரபாடி, கீழ்போத்தரை, நாகபாடி, கீழ்போத்தரை விவசாயப் பகுதிகள்.

Advertisement