LOADING...
பவர் கட் அலர்ட்! நாளை (ஜூலை 01) தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை! எங்கு தெரியுமா?
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

பவர் கட் அலர்ட்! நாளை (ஜூலை 01) தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை! எங்கு தெரியுமா?

எழுதியவர் Vasuki
Jun 30, 2026
02:26 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை ஜூலை 01, புதன்கிழமை (30.06.2026) அன்று சென்னையின் முக்கிய கடற்கரையோரப் பகுதிகளான பெசன்ட் நகர் மற்றும் கொட்டிவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் மதியம் வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை: பெசன்ட் நகர் 33 கேவி (Besant Nagar 33 KV) துணை மின் நிலையத்திற்குட்பட்ட 7-ஆவது அவென்யூ, ருக்மணி ரோடு பகுதி, டைகர் வரதாச்சாரி ரோடு பகுதி, கங்கை தெரு பகுதி, அருண்டேல் பீச் ரோடு பகுதி மற்றும் எம்.ஜி.ஆர் ரோடு பகுதி. கொட்டிவாக்கம் 33 கேவி (Kottivakkam 33 KV) துணை மின் நிலையத்திற்குட்பட்ட கொட்டிவாக்கம் குப்பம் ரோடு, வால்மீகி நகர், 2-ஆவது சீ வார்ட் ரோடு, 3-ஆவது சீ வார்ட் ரோடு, 4-ஆவது சீ வார்ட் ரோடு, பாலகிருஷ்ணன் ரோடு, கே.கே. ரோடு மற்றும் ராஜா ரங்கசாமி அவென்யூ

Advertisement