
'தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் மேம்படுத்தியிருக்க வேண்டும்': அமித்ஷா
செய்தி முன்னோட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் பத்திரங்கள் திட்டம்(இபிஎஸ்) குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை "முழுமையாக மதிக்கிறேன்" என்று கூறினார். ஆனால் அதை ரத்து செய்வதற்கு பதிலாக மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா டுடே மாநாட்டில் பேசிய அவர், அரசியலில் கறுப்புப் பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்றார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற திட்டம் குறித்தும் பேசிய அமித் ஷா, அந்த திட்டம் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் தொடர்ச்சியான செலவுகளைக் குறைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது.
இந்தியா
தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம்
தரவுகளின்படி, 1,260 நிறுவனங்கள்/தனிநபர்கள் ரூ.12,155.51 மதிப்புள்ள 22,217 பத்திரங்களை வாங்கியுள்ளனர். அதே நேரத்தில் 23 அரசியல் கட்சிகள் அவற்றை மீட்டெடுத்துள்ளன.
இதில் பாரதிய ஜனதா கட்சி(பாஜக) தான் அதிக நன்கொடையைப் பெற்றுள்ளது. ரூ.6,061 கோடி மதிப்பிலான பத்திரங்களை அக்கட்சி மீட்டெடுத்துள்ளது.
கடந்த மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.
இந்த பத்திரங்களை வழங்குவதை நிறுத்தவும், இந்த முறையில் அளிக்கப்பட்ட நன்கொடைகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6 ஆம் தேதிக்குள் தெரிவிக்கவும் அப்போது எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதால் அந்த சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.