மதுரையில் உலக தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 'தமிழ்க் கூடல்' நிகழ்ச்சி
செய்தி முன்னோட்டம்
மதுரையில் உள்ள உலக தமிழ் சங்கத்தில் செயல்பட்டு வரும் 'தமிழ் தந்த அறக்கட்டளை' சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட 'தமிழ் கூடல்' நிகழ்ச்சியில் அறிவுசார்ந்த தமிழ் இலக்கிய மாநாடு நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் தமிழ் மொழி மற்றும் பண்டைய தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகள் குறித்து பேசப்பட்டது.
உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10ற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அதன்படி, ஓய்வுபெற்ற இந்திய நிர்வாக சேவை அதிகாரியும் தற்போது ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகராக இருந்து வரும் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் மதுரை மற்றும் தமிழுக்கான அதன் பங்களிப்பு குறித்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், வைகை நதியை சங்க இலக்கியங்களில் காதல் நதியாக பலர் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.
உலகம் முழுவதும் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள்
புலம் பெயர்ந்த தமிழர்கள் குறித்து சுபாஷினி கனகசுந்தரம்
அதனை தொடர்ந்து மதுரையில் உள்ள பல சிறு ஆறுகள் குறித்தும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டினார். மேலும், திருக்குறளும், சங்க இலக்கியங்களும் வளமான வாழ்விற்கு வழி வகுக்கும் என்றும் அவர் கூறினார்.
அவரை தொடர்ந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் குறித்தும், அவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்தும் தமிழக பாரம்பரிய அறக்கட்டளை நிறுவனர் சுபாஷினி கனகசுந்தரம் பேசினார்.
அவர் பேசுகையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள் என்கிற எண்ணம் மக்களிடம் உள்ளது, ஆனால் அவர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.