Page Loader
இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம்

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 26, 2024
08:50 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியர்களின் தோல் நிறம் குறித்த இனவெறிக் கருத்துக்களால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து பதவியில் இருந்து விலகிய சாம் பிட்ரோடாவை, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவராக காங்கிரஸ் மீண்டும் நியமித்ததுள்ளது. இது குறித்த அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் K.C.வேணுகோபால் வெளியிட்டார். "மாண்புமிகு காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ சாம் பிட்ரோடாவை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவராக மீண்டும் நியமித்துள்ளார்" என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. முன்னதாக கிழக்கில் உள்ள இந்தியர்கள், சீனர்களை ஒத்ததாகவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருப்பதாக அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, கடந்த மே 8ஆம் தேதி சாம் பிட்ரோடா தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

ட்விட்டர் அஞ்சல்

சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம்