
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் ரூ.2.81 கோடி காணிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிரிவல பாதை உள்ளது.
அதில் அஷ்டலிங்க கோயில்கள், ஆதி அண்ணாமலையார் கோயில், துர்க்கை அம்மன் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில் என சுமார் 50க்கும் மேற்பட்ட கோயில்கள் அமைந்துள்ளது.
இந்த அனைத்து கோயில்களிலும் உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படும் என கூறப்படுகிறது.
ஆனால் கடந்த மாதம் உண்டியல்களில் உள்ள காணிக்கை எண்ணப்படவில்லை என்று தெரிகிறது.
இதனை தொடர்ந்து இந்த உண்டியல்களின் காணிக்கைகளை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் இன்று(மார்ச்.,15) எண்ண திட்டமிடப்பட்டிருந்தது.
தங்கம், வெள்ளியும் இருந்துள்ளது
2 மாதத்திற்கு பிறகு எண்ணப்பட்ட அண்ணாமலையார் கோயில் உண்டியல்
இதனை தொடர்ந்து அந்த கோயில் உடையல்களில் உள்ள காணிக்கைகளை அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து இன்று எண்ணப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கிறது.
அதன்படி கோயில் ஊழியர்கள், தன்னார்வாலர்கள் ஆகியோர் இந்த காணிக்கை எண்ணும் பணி, வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.
உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதையடுத்து, அதில் ரொக்கமாக ரூ.2,81,18,750 இருந்துள்ளது.
மேலும் இதுதவிர உண்டியலில், 405 கிராம் தங்கமும், 2 கிலோ 385 கிராம் வெள்ளியும் இருந்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.