எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்தினை முடக்கிய அமலாக்கத்துறை
ஐ.என்.எக்ஸ். பண மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதியினை சேர்ந்த கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான 4 அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதன்படி கடந்த 2007ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் பா.சிதம்பரம். அப்பொழுது ஐ.என்.எக்ஸ்.மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியினை நன்கொடையாக பெற்றதாக தெரிகிறது. இதனையடுத்து இந்த நிதியினை பெற மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடான முறையில் அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
கருப்புப்பண மோசடி என்னும் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு
இந்த குற்றசாட்டு எழுந்ததை தொடர்ந்து, இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டது. அதற்கான விசாரணையும் தனித்தனியாக நடந்தது. இந்த வழக்கில் பா.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடவேண்டியவை. இதனை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டின்படி ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு கார்த்தி சிதம்பரமும் உதவி செய்ததாக தகவல்கள் வெளியானது. அதனடிப்படையில் சிபிஐ கடந்த 2007ம் ஆண்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்து செய்து விசாரணையினை துவங்கியது. அதே போல் அமலாக்கத்துறையும் கருப்புப்பண மோசடி என்னும் பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான கர்நாடகா மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள ரூ.11.04 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.