நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள்
நாகர்கோவில் மாவட்டம் அருகேயுள்ள கணபதிபுரம் தெற்கு ஊரில் வசித்து வருபவர் முருகன். இவர் நிதி நிறுவனம் ஒன்றினை தற்போது நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 4 ஊழியர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் அவர் கடந்த சனிக்கிழமை மாலை தனது நிதி நிறுவனத்தினை மூடிவிட்டு சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் முருகனின் வீடு மற்றும் நிதி நிறுவனத்தின் பூட்டுகளை உடைத்து சுமார் 100 சவரன் நகையினையும், வீட்டில் இருந்த ரூ.6 லட்சம் ரொக்க பணத்தினையும் கொள்ளை அடித்து சென்றதாக புகார் தெரிவிக்கிறது. மேலும் அவர்கள் காவல்துறை மோப்பநாய் கொண்டு கண்டுபிடிக்க முடிக்காமல் இருக்க வீடு மற்றும் நிதி நிறுவனத்தில் மிளகாய் பொடியினை தூவி சென்றுள்ளார்கள்.
கைரேகை நிபுணர்கள் கொண்டு காவல்துறை விசாரணை
தொடர்ந்து, பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கினையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளார்கள். இதனையடுத்து இன்று(மே.,15) காலை அந்நிறுவனத்தின் ஊழியர்கள் நிறுவனத்தை திறக்க வந்த பொழுது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததையும், மிளகாய் பொடி தூவப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்கள். அதன்படி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி பிரசாத், கன்னியாகுமரி துணை காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா முதலானோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டுள்ளார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் உதவி கொண்டு காவல்துறை தீவிர விசாரணையினை இது குறித்து நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.