Loading...
இந்தியாவின் ஏஎம்சிஏ போர் விமானத்திற்கு புதிய பலம்! ரிலையன்ஸ் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் இணையும் பிரம்மாண்ட திட்டம்
ரிலையன்ஸ் - ரோல்ஸ் ராய்ஸ் கூட்டணி

இந்தியாவின் ஏஎம்சிஏ போர் விமானத்திற்கு புதிய பலம்! ரிலையன்ஸ் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் இணையும் பிரம்மாண்ட திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 14, 2026
08:19 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் ஏஎம்சிஏ (AMCA) எனப்படும் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டத்திற்குத் தேவையான சக்திவாய்ந்த போர் இன்ஜின்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக ரிலையன்ஸ் மற்றும் பிரிட்டனின் பிரபல ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்கள் இணைந்துள்ளன. இதற்காக ஏரோஸ்பேஸ் கேஸ் டர்பைன் காம்ப்ளக்ஸ் என்ற அதிநவீன மையத்தை இந்தியாவில் அமைப்பது குறித்து இரு நிறுவனங்களும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் சுயசார்பு இலக்கை அடையவும் வெளிநாட்டு சார்பைக் குறைக்கவும் இக்கூட்டணி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டம்

ஏரோஸ்பேஸ் கேஸ் டர்பைன் காம்ப்ளக்ஸ் திட்டம்

இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கத் திட்டமிட்டுள்ள இந்த மையத்தில் போர் விமான இன்ஜின்களின் வடிவமைப்பு, ஆராய்ச்சி, உற்பத்தி, சோதனை மற்றும் வாழ்நாள் பராமரிப்பு போன்ற அனைத்துப் பணிகளும் ஒரே கூரையின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளன.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது பல தசாப்த கால ஏரோ-இன்ஜின் தொழில்நுட்ப அனுபவத்தையும், ரிலையன்ஸ் நிறுவனம் தனது மிகப்பெரிய தொழில் துறை உற்பத்தித் திறன் மற்றும் திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் ஆற்றலையும் ஒருங்கிணைத்து செயல்படத் தீர்மானித்துள்ளன.

சிஇஓ

அனந்த் அம்பானி மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் சிஇஓ கருத்து

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனந்த் அம்பானி பேசுகையில், "இந்தியாவின் மூலோபாயத் தன்னாட்சிக்கு அதிநவீன தொழில்நுட்பங்களில் சுயசார்பு ஆற்றல் அவசியம்.

இக்கூட்டணி மூலம் உள்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ஏரோ-இன்ஜின் உற்பத்தி மையத்தை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்." எனக் கூறினார்.

ரோல்ஸ் ராய்ஸ் தலைமை செயல் அதிகாரி துஃபான் எர்கின்பில்கிக், "எங்களது மேம்பட்ட பொறியியல் அனுபவமும் ரிலையன்ஸின் தொழில் திறனும் இணைவது இந்திய விண்வெளித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்." எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

போர் விமானம்

ஏஎம்சிஏ போர் விமானத்திற்கு உள்நாட்டு இன்ஜின் அவசியம்

இந்திய விமானப் படைக்காகத் தயாரிக்கப்படும் ஏஎம்சிஏ (AMCA) போர் விமானம், நவீன ஸ்டெல்த் நுட்பங்களைக் கொண்ட ஐந்தாம் தலைமுறை விமானமாகும்.

இதுவரை இந்தியப் போர் விமானங்களுக்கான இன்ஜின்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டிய சூழல் இருந்தது.

இதனால் சொந்தமாகவே போர் விமான இன்ஜின்களைத் தயாரிக்கும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், அது ஏஎம்சிஏ விமானத்திற்கு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் நாட்டின் பிற ராணுவ மற்றும் வணிக ரீதியிலான விமானத் திட்டங்களுக்கும் மிகப்பெரிய அடித்தளமாக அமையும்.

ADVERTISEMENT

வாய்ப்புகள்

திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால வாய்ப்புகள்

தற்போது இந்த கூட்டு முயற்சியானது முதற்கட்ட ஆய்வு மற்றும் திட்டமிடல் நிலையிலேயே உள்ளது.

வணிக ரீதியிலான ஒப்பந்தங்கள் அல்லது கூட்டாண்மை விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகவில்லை.

மேலும், இந்த மையம் வெறும் போர் விமான இன்ஜின்களோடு நின்றுவிடாமல், எதிர்காலத்தில் விண்வெளி, கடற்படை மற்றும் பிற பாதுகாப்பு பயன்பாடுகளுக்கான ஆற்றல் அமைப்புகளையும் தயாரிக்கும் மையமாக விரிவாக்கப்பட வாய்ப்புள்ளது.

இத்திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் இந்திய பாதுகாப்புத் துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT