தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 27ம் தேதி வரை மழை - வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு கடலோரம் மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் வரும் ஜூன் 27ம்தேதி வரை கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் காற்றின் வேகத்தின் மாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் வரும் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் வரும் செவ்வாய்கிழமை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர்பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45-65 கிமீ.,வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்து பலத்தக்காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
மழைக்கான வாய்ப்பு குறித்து வானிலை அறிக்கை
#BREAKING || தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
— Thanthi TV (@ThanthiTV) June 23, 2023
*லேசானது முதல் மிதமான மழைக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
*சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்#TNRain #WeatherUpdate #Chennairain #Rainfall #ThanthiTV pic.twitter.com/LjSjnZN0fz