
சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி மீண்டும் துவக்கம்
செய்தி முன்னோட்டம்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னலினை சந்தித்தனர்.
2019ம் ஆண்டு இறுதியில் துவங்கிய இந்த கொரோனா பெரும் கோரத்தாண்டவமாடி பல உயிர்களை பறித்தது.
இந்தியாவில் 2020ல் துவங்கிய இந்த கொரோனா பாதிப்பானது 2022ம் ஆண்டுக்கு பின்னரே சற்று குறைய துவங்கியது.
அதன் பின்னரே இந்தியா தனது இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பானது இந்தியாவில் அதிகரிக்க துவங்கியுள்ளது.
கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது என்று பல்வேறு தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கிறது.
அதன்படி இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.
முதற்கட்ட பணிகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 200ஐ கடந்து வரும் நிலையில், சென்னையிலும் இதன் எண்ணிக்கை வேகமாக பரவி வருகிறது.
இதனால் சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறது.
அதில் ஒன்று தான், இந்த முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்துவது.
இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்ட வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை சென்னை மாநகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இதன் முதற்கட்டமாக தொற்று பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மட்டும் இந்த ஸ்டிக்கர் ஒட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.