உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிசம்பர் 14) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தூத்துக்குடி: விளாத்திகுளம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட விளாத்திகுளம், சூரங்குடி மற்றும் குளத்தூர் பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை அமலில் இருக்கும். சூரங்குடி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட சூரங்குடி மற்றும் மேல்மந்தை பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை அமலில் இருக்கும். குளத்தூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட குளத்தூர், வேப்பலோடை மற்றும் கல்மேடு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை அமலில் இருக்கும்.