Page Loader
தொடர் சர்ச்சைகளில் சிக்கும் டிடிஎஃப் வாசன் - நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்ததால் கார் பறிமுதல்
நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணித்த டிடிஎஃப் வாசன்

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் டிடிஎஃப் வாசன் - நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்ததால் கார் பறிமுதல்

எழுதியவர் Nivetha P
Jan 03, 2023
04:08 pm

செய்தி முன்னோட்டம்

டிடிஎஃப் வாசன் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் அதிவேகத்தில் பைக் பயணம், வீலிங் சாகசம் போன்ற வீடியோக்களை பதிவு செய்வது வழக்கம். போக்குவரத்து விதிகளை மீறியதாக இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் உள்ளது. கடந்த மாதம் கடலூரில் கடைத்திறப்பு விழாவிற்கு வந்த இவரை பார்க்க ஒரு பெரும் கூட்டம் கூடி, போக்குவரத்திற்கு இடையூறு அளித்ததால் ஐந்து பிரிவுகளில் இவர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'காலேஜ் ரோடு' என்னும் படத்தின் சிறப்பு காட்சியை காண வடபழனியில் உள்ள கமலா திரையரங்கிற்கு நேற்று வாசன் வந்துள்ளார். இவரை காண ரசிகர் கூட்டம் வரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

டிடிஎஃப் வாசன் மீது நடவடிக்கை எடுக்க எழும் கோரிக்கைகள்

ரெஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்டும் நம்பர் பிளேட் இல்லாமல் காரில் பயணித்த டிடிஎஃப் வாசன்

இந்நிலையில் டிடிஎஃப் வாசன் வந்த வெள்ளை நிற மகேந்திராவில் நம்பர் பிளேட் இல்லாததால் போக்குவரத்து போலீஸ் ஸ்பாட் அபராதமாக ரூ.500ஐ விதித்துள்ளனர். அதனை காரின் உரிமையாளர் பிரவீன் என்பவர் கட்டியுள்ளார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அந்த காருக்கு ரெஜிஸ்ட்ரேஷன் இருந்தும் நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, காரில் நம்பர் பிளேட் ஒட்டி எடுத்துசெல்லுமாறு கூறி போலீஸ் காவல் நிலையத்திற்கு காரை எடுத்து சென்றுள்ளனர். பின்னர் காவல்நிலையத்திற்கு சென்று இவர்கள் நம்பர் பிளேட் ஒட்டி காரை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து டிடிஎஃப் வாசன் இது போன்ற அத்துமீறல்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுமாறு செயல்படுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுவது குறிப்பிடத்தக்கது.