பிஎம் சூர்ய கர் திட்டத்தில் MNRE அறிமுகப்படுத்திய புதிய டிஜிட்டல் வசதி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE), பிஎம் சூர்ய கர்: முஃப்த் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் வீட்டில் கூரைமேல் சோலார் அமைப்புகளை அமைத்து பயனடைந்துள்ளன. பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்குத் தேவையான சோலார் தகடுகளின் திறன் மற்றும் அதற்கான செலவுகளை எளிதாகக் கண்டறிய "Get Solar in 60 Secs" என்ற புதிய இணையவழி கருவியை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
கருவி
'Get Solar in 60 Secs' கருவி
தேவையான விவரங்கள்: பயனர் பெயர், தொலைபேசி எண், மாநிலம், மாவட்டம், மாத மின்சாரக் கட்டணம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் அளவு.
வழங்கப்படும் தகவல்கள்: சோலார் அமைப்பின் தேவையான திறன், தோராயமான நிறுவல் செலவு, அரசு வழங்கும் மானியத் தொகை, வங்கி மூலம் கிடைக்கும் கடன் வசதி, வட்டி விகிதம் மற்றும் வாழ்நாள் சேமிப்பு பற்றிய விவரங்கள்.
நேரடித் தொடர்பு: இத்தளத்தின் மூலம் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களை வாட்ஸ்அப் அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும்.
சாட்பாட்
வாட்ஸ்அப் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்
விண்ணப்ப செயல்முறையை மேலும் எளிதாக்க, 'SUNtosh' என்ற வாட்ஸ்அப் அடிப்படையிலான AI சாட்பாட் சேவையை MNRE அறிமுகப்படுத்தியுள்ளது.
இச்சேவை மூலம் பயனர்கள் சோலார் பேனல் நிறுவுதல், மானியத் தகுதிகள், நிதிச் சேமிப்பு குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைகளை அறிந்து கொள்ளவும் முடியும்.
பிரதமர் நரேந்திர மோடியால் பிப்ரவரி 2024-இல் தொடங்கப்பட்ட இத்திட்டம், 1 கோடி வீடுகளுக்குக் கூரைமேல் சோலார் அமைத்து மாதம் தோறும் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்குவதை நோக்கமாக்கக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் இலக்கு 2026-27 நிதியாண்டிற்குள் 30 GW கூரைமேல் சோலார் திறனை எட்டுதல் ஆகும்.