Loading...
140 கோடி மக்களின் கனவு! சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

140 கோடி மக்களின் கனவு! சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து

எழுதியவர் Sekar Chinnappan
Aug 15, 2026
07:54 am

செய்தி முன்னோட்டம்

நாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இந்திய விடுதலைக்காக தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) காலை தனது நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்தினார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தியாகிகளின் வீரமும் அர்ப்பணிப்பும் தான் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர உதவியது எனக் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் கனவுகளே 2047க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் (Viksit Bharat) என்ற இலக்கை அடைய நம்மைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தியர்கள்

140 கோடி இந்தியர்களின் பங்களிப்பு மற்றும் வளர்ச்சி

இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் 140 கோடி மக்களின் கூட்டு உழைப்பால் இந்தியா இன்று அனைத்துத் துறைகளிலும் புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.

இந்த வேகமான வளர்ச்சிப் பயணம் இனிவரும் காலங்களிலும் இன்னும் கூடுதல் வேகத்துடன் தொடர வேண்டும் எனத் தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் இந்தியாவின் வலிமையை உலகிற்குப் பறைசாற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து மக்களுக்கும் தனது 80வது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மத்திய அமைச்சர்கள்

மத்திய அமைச்சர்களின் வாழ்த்துகள் மற்றும் கருத்துக்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் பலரும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தியாகிகளின் நினைவைப் போற்றி, இந்தியாவை சுயசார்பு கொண்ட நாடாகவும், வளமான தேசமாகவும் மாற்ற மக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டார்.

அதேபோல பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்த 80வது சுதந்திர தினம் இந்தியாவை மேலும் பாதுகாப்பானதாகவும், நவீனத்துவம் மற்றும் புதுமைகளில் சிறந்து விளங்கும் வல்லரரசாகவும் மாற்ற நமக்கு நல்வாய்ப்பை வழங்கியுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மை பாரத்

தேசிய ஒற்றுமை மற்றும் மை பாரத் நோக்கம்

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

பல தசாப்த கால போராட்டத்திற்குப் பிறகே இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது என்றும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை மக்கள் எப்போதும் பாதுகாப்பாகப் பேண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் தேசியக் கொடியான மூவர்ணக் கொடி நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளித்து, ஒரு வலுவான பாரதத்தைக் கட்டியெழுப்ப வழிவகுக்கும் என்றும் தலைவர்கள் தங்களது சுதந்திர தின வாழ்த்து செய்திகளில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ADVERTISEMENT