Loading...
மாணவர்களின் ஆலோசனைகளுக்கு நன்றி! நீட் தேர்வு முறைகேடு குறித்துத் நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட புதிய வீடியோ
நீட் தேர்வு முறைகேடு குறித்துத் நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட புதிய வீடியோ

மாணவர்களின் ஆலோசனைகளுக்கு நன்றி! நீட் தேர்வு முறைகேடு குறித்துத் நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட புதிய வீடியோ

எழுதியவர் Sekar Chinnappan
Jul 25, 2026
07:06 am

செய்தி முன்னோட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிரப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நள்ளிரவில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தமக்குச் சிறந்த ஆலோசனைகளை வழங்கிய இளைஞர்கள் மற்றும் பயனர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து இரண்டாவது நாளாகப் பிரதமர் மோடி இந்த விவகாரம் குறித்துப் வீடியோ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்தரவு

விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப் பிரதமர் உத்தரவு

முந்தைய வீடியோவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்திருந்த பிரதமர், வினாத்தாள் கசிவு சம்பவங்கள் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் மிக தீவிரமான பிரச்சினை என்று சுட்டிக்காட்டினார்.

நீட் விவகாரத்தில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், தான் இன்னும் முழுமையாகத் திருப்தியடையவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இதுதொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்கத் தனி விரைவு நீதிமன்றங்களை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

புதிய சட்ட வரைவு

10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்ட வரைவு

பிரதமர் மோடியின் வீடியோ பதிவைத் தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான புதிய சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த புதிய மசோதாவில், வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சீர்திருத்தம்

எதிர்க்கட்சிகளின் போராட்டம் மற்றும் தேசிய தேர்வு முகமை சீர்திருத்தம்

புதிய சட்ட வரைவு கொண்டுவரப்பட்ட போதிலும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இருப்பினும், தேசிய தேர்வு முகமையில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, தேர்வு முறையை முழுமையாக சீரமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஓரிரு மாதங்களுக்குள் தேர்வு அமைப்பில் தேவையான அனைத்து சீர்திருத்தங்களும் முழுமையாகச் செய்து முடிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT