LOADING...
ரிசல்ட் முக்கியம் இல்ல, பேஸ்மென்ட் தான் முக்கியம்; மாணவர்களுடனான உரையாடலில் பிரதமர் மோடி பகிர்ந்த வெற்றி மந்திரம்
மாணவர்களுக்கு பிரதமர் மோடியின் அறிவுரை

ரிசல்ட் முக்கியம் இல்ல, பேஸ்மென்ட் தான் முக்கியம்; மாணவர்களுடனான உரையாடலில் பிரதமர் மோடி பகிர்ந்த வெற்றி மந்திரம்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 06, 2026
11:34 am

செய்தி முன்னோட்டம்

தேர்வு நேரங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுதோறும் நடத்தி வரும் பரிக்ஷா பே சர்ச்சா (Pariksha Pe Charcha) நிகழ்ச்சியின் 9 வது பதிப்பு இன்று (பிப்ரவரி 6) நடைபெற்றது. டெல்லி, கோவை, ராய்ப்பூர், கௌஹாத்தி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வந்திருந்த "தேர்வு வீரர்களுடன்" (Exam Warriors) பிரதமர் கலந்துரையாடினார்.

முடிவுகள்

தேர்வு முடிவுகள் இலக்கல்ல

மாணவர்களிடம் பேசிய பிரதமர், தேர்வு முடிவுகள் மட்டுமே வாழ்க்கையின் இறுதி இலக்காக இருக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். முழுமையான வளர்ச்சி: "வாழ்க்கையில் உங்களின் முழுமையான வளர்ச்சியே (All-round development) இலக்காக இருக்க வேண்டும். தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் மட்டுமே உங்களை அடையாளப்படுத்தாது" என்றார். அடித்தளத்தை பலப்படுத்துங்கள்: "பள்ளிக் காலத்தில் உங்கள் அறிவின் அடித்தளத்தை (Foundation) பலப்படுத்திக் கொள்ளுங்கள். அடித்தளம் வலுவாக இருந்தால், போட்டித் தேர்வுகளில் வெற்றி என்பது தானாகவே உங்களைத் தேடி வரும்" என்று அவர் அறிவுரை வழங்கினார். கடந்த காலத்தை மறங்கள்: "கடந்த காலத்தில் என்ன நடந்தது என்று யோசிப்பதைக் கைவிட்டு, தற்போது உங்கள் முன்னால் இருக்கும் வாய்ப்புகளை மட்டும் கவனியுங்கள்" என்று பிரதமர் கூறினார்.

அறிவுரை

பெற்றோர்களுக்கான அறிவுரை

போட்டித் தேர்வுகளுக்காக மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் பெற்றோர்களுக்கும் பிரதமர் ஒரு முக்கிய செய்தியை வழங்கினார். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும் என்றும், அவர்களின் பலத்திற்கு ஏற்ப அவர்களை வளர அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். படிப்புடன் ஓய்வு, விளையாட்டு, புதிய திறன்கள் மற்றும் பொழுதுபோக்குகள் ஆகியவற்றைச் சமமாக வைத்திருப்பதே ஒரு சிறந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Advertisement

கலாச்சாரம்

பெண்களின் அதிகாரம் மற்றும் கலாச்சாரப் பெருமை

அசாம் மாநிலத்தின் பாரம்பரிய கைத்தறி ஆடைகளை மாணவர்களுக்கு வழங்கிப் பாராட்டிய பிரதமர், "இவை அசாம் பெண்களால் வீடுகளிலேயே உருவாக்கப்பட்டவை. இது பெண்களின் அதிகாரமளித்தலின் (Women Empowerment) அடையாளம். இதை உங்களுக்கு வழங்குவதில் நான் பெருமைப்படுகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அருணாச்சல பிரதேசம் போன்ற நாட்டின் எல்லைப் பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவர்கள், பிரதமருடனான இந்தச் சந்திப்பு தங்களுக்கு ஒரு கனவு நனவானது போன்ற உணர்வைத் தந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Advertisement