NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு 3 மாத இடைவெளியை அறிவித்தார் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு 3 மாத இடைவெளியை அறிவித்தார் பிரதமர் மோடி

    'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு 3 மாத இடைவெளியை அறிவித்தார் பிரதமர் மோடி

    எழுதியவர் Sindhuja SM
    Feb 25, 2024
    04:49 pm

    செய்தி முன்னோட்டம்

    மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், தனது பிரபலமான வானொலி நிகழ்ச்சியான 'மனதின் குரல்' அடுத்த மூன்று மாதங்களுக்கு நிறுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

    ஞாயிற்றுக்கிழமை தனது 110வது பதிப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் இதனை அறிவித்தார்.

    அக்டோபர் 3, 2014 இல் தொடங்கப்பட்ட, இந்த நிகழ்ச்சி இந்திய சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுடன் பேசுவதையும், அரசாங்க முன்முயற்சிகள், கொள்கைகள் மற்றும் நலத்திட்டங்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில், பிரதமர் மோடி பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசியிருந்தார்.

    இந்தியா

    மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்படுமா MCC 

    "மார்ச் 8 ஆம் தேதி, நாம் மகளிர் தினத்தைக் கொண்டாடுவோம். இந்த நாள் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பெண்களின் பங்களிப்பை போற்றும் ஒரு வாய்ப்பாகும்" என்று அவர் கூறினார்.

    மாடல் நடத்தை விதிகள்(எம்.சி.சி.) மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர் குறிப்பிட்டார்.

    MCC என்பது தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் நடத்தைக்காக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் தொகுப்பாகும்.

    மேலும், முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பதிவு செய்ய வேண்டும் என்றும், தனது நிகழ்ச்சியின் எபிசோட்களின் யூடியூப் குறும்படங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஹார்வர்டு பல்கலைக்கழத்திற்கான 100 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு அமெரிக்கா
    பல ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக நிகர லாபத்தை பதிவு செய்தது பிஎஸ்என்எல் பிஎஸ்என்எல்
    ஊழலால் பணிநீக்கம் செய்யப்பட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது; மத்திய அரசு அதிரடி ஓய்வூதியம்
    மின்சார வாகன சந்தையில் நுழைந்தது கேடிஎம்; எலக்ட்ரிக் டியூக் மாடல் அறிமுகம் கேடிஎம்

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 188 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார் மாலத்தீவின் 'இந்திய எதிர்ப்பு' அதிபர்: 2 கட்சிகள் புறக்கணிப்பு  மாலத்தீவு
    இந்தியாவில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    அமெரிக்காவில் இந்திய மாணவரை அடித்து நொறுக்கிய கும்பல்: அமைச்சர் ஜெய்சங்கரிடம் உதவி கோரி கடிதம்  அமெரிக்கா

    பிரதமர் மோடி

    திருச்சி சர்வதேச விமான நிலைய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி  திருச்சி
    சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டன்; விஜயகாந்துக்கு மோடி புகழஞ்சலி விஜயகாந்த்
    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு ரஜினிகாந்த்
    'கேப்டன் விஜயகாந்த் எனும் உற்ற நண்பன்': புதிய வலைப்பதிவை வெளியிட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025