LOADING...
மருத்துவம் முதல் விவசாயம் வரை ஏஐ புரட்சி! 131வது மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பேச்சு
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா உலகையே வியக்க வைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்

மருத்துவம் முதல் விவசாயம் வரை ஏஐ புரட்சி! 131வது மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பேச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 22, 2026
11:36 am

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 131வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, டெல்லியில் சமீபத்தில் நடந்து முடிந்த ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 குறித்து அவர் விரிவாகப் பேசினார். "இந்த மாநாட்டின் கண்காட்சியில் உலகத் தலைவர்களுக்கு இந்தியாவின் ஏஐ கண்டுபிடிப்புகளைக் காட்டினேன். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், விவசாயிகள் தங்கள் பால் பண்ணைகளை 24 மணிநேரமும் ஏஐ உதவியுடன் கண்காணிப்பதிலும் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் உலகையே வியக்க வைத்துள்ளது." என்று அவர் குறிப்பிட்டார்.

உலகத்தரம்

உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகள்

இந்தியத் தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஜீரோ டிபெக்ட் எனப்படும் குறையற்ற, உலகத்தரம் வாய்ந்த பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். விண்வெளி ஆராய்ச்சி, செமிகண்டக்டர்கள் மற்றும் பசுமை எரிசக்தி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் இந்திய இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் நாட்டை உலக அளவில் உயர்த்தி வருவதாகப் பாராட்டினார். தரம் மற்றும் புத்தாக்கத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியா உலகளாவிய வர்த்தக மையமாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உறுப்பு தானம்

உடல் உறுப்பு தானம்: ஒரு நெகிழ்ச்சியான பதிவு

கேரளாவைச் சேர்ந்த சிறுமி ஆலின் ஷெரின் ஆபிரகாமின் தியாகத்தைப் பிரதமர் நினைவு கூர்ந்தார். அச்சிறுமி மறைந்த பிறகு, அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளைத் தானம் செய்து மற்றவர்களுக்கு வாழ்வளித்ததைப் பாராட்டிய பிரதமர், "ஆலினைப் போன்றவர்கள் உறுப்பு தானம் மூலம் மற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கிறார்கள். இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார்.

Advertisement

டிஜிட்டல் பாதுகாப்பு

டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் கலாச்சாரப் பெருமை

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், சைபர் மோசடிகள் குறித்தும் பிரதமர் எச்சரித்தார். கேஒய்சி நடைமுறைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தும்போது விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அடிமைத்தனத்தின் அடையாளங்களிலிருந்து விடுபட்டு, நமது கலாச்சார அடையாளங்களை ஏற்பதே பஞ்ச் பிரான் கொள்கையின் நோக்கம் என்றார். நாளை (பிப்ரவரி 23) குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கவுள்ள 'ராஜாஜி திருவிழா' குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

விவசாயம்

விவசாயத்தில் புதிய பார்வை

ஒடிசாவைச் சேர்ந்த இளம் விவசாயி ஹிரோத் படேலின் கதையை ஒரு முன்னுதாரணமாகப் பிரதமர் பகிர்ந்து கொண்டார். பாரம்பரிய நெல் விவசாயத்திலிருந்து விலகி, புதிய தொழில்நுட்பப் பார்வையுடன் விவசாயத்தை அணுகி வெற்றி பெற்றுள்ள ஹிரோத் படேலின் முயற்சி மற்ற இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக அவர் தெரிவித்தார்.

Advertisement