Page Loader
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத்
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத்

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத்

எழுதியவர் Nivetha P
Jan 25, 2023
06:40 pm

செய்தி முன்னோட்டம்

கன்னியாகுமரி திருவட்டார் அருகேயுள்ள மனக்காவிளையை சேர்ந்தவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக'விற்காக பரப்புரை செய்த இவர், தற்போதும் திமுக மீதான விமர்சனங்களுக்கு இணையத்தளம் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார். இவருக்கு நரம்பியல் ரீதியான பிரச்சனை இருப்பதால், அவ்வப்போது உடல்நல பாதிப்பிற்கு உட்பட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. வீட்டில் இருந்தவாறே சிகிச்சை பெற்று வந்த இவருக்கு, இன்று(ஜன.,25) அதிகாலை உடல்நலம் மோசமடைந்துள்ளது. இதனையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு, மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி வாயிலாக பேசினார்

நாஞ்சில் சம்பத் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் தமிழக முதல்வர்

இது குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திமுக'வினர் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக நாஞ்சில் சம்பத்'தின் மகனான மருத்துவர் சரத் பாஸ்கரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர், நாஞ்சில் சம்பத் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவரது குடும்பத்திற்கு தைரியம் அளித்தார் என்று செய்திகள் வெளியானது. தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களையும், மாநகராட்சி மேயர் மகேஷையும் தமிழக முதல்வர் தொடர்பு கொண்டார். அவர்களிடம் நாஞ்சில் சம்பத்'திற்கு உரிய அறுவை சிகிச்சை அளிக்க தேவையான உதவிகளை செய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.