Page Loader
ககன்யான் சோதனை ஓட்டம் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ககன்யான் சோதனை ஓட்டம் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

எழுதியவர் Sindhuja SM
Oct 21, 2023
05:19 pm

செய்தி முன்னோட்டம்

வரும் 2025 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின், முதல் சோதனையை இஸ்ரோ இன்று காலை வெற்றிகரமாக நடத்தியது. இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பிரதமர் மோடி, "இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான 'ககன்யான்' திட்டத்தை நனவாக்குவதற்கு இதுஒ ஒரு முதல் படியாகும். நமது விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்." என்று கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு ககன்யான் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவு