கோயம்புத்தூரில் யானைகள் தாக்கி ஒரே நாளில் இரண்டு நபர்கள் அடுத்தடுத்து பலி
இன்று, (மார்ச் 1), கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைகட்டியில் யானை தாக்கி மீண்டும் ஒரு நபர் இறந்து போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு தான் யானையால் தாக்கப்பட்டு ஒரு நபர் இறந்த சம்பவத்தின் தாக்கம் குறையாத நிலையில், மீண்டும் அதே போன்ற ஒரு சமபவம் நடந்துள்ளது. இறந்த நபரின் பெயர் மருதாசலம், இவர் வயது 67 மற்றும் இவர் களக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனைகட்டியின் தெற்கு வனப்பகுதியில் இருந்து 1,500 மீட்டர் தொலைவில் இறந்து கிடந்தார்.
மூன்றுக்கு மேற்பட்ட யானைகள் தாக்கி இருக்கலாம்
யானைகளால் தாக்கப்பட்டு இறந்த மருதாசலம், காலை 7 மணியளவில் வழக்கம் போல காலைகடன்களை கழிக்க, வனப்பகுதிக்கு அருகில் சென்றார். அந்நேரத்தில் அப்பகுதியில் மூன்று யானைகள் இருந்ததாகவும், அவற்றில் எத்தனை யானைகள் முதியவரைத் தாக்கின என்பதும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வனத்துறையினர் தலைமையிலான குழுவினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வரைந்தனர். அதன் பிறகு, தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு முன்பு 36 வயதான நபர் இதே போல யானை தாக்கப்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.