
கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வகை தொற்று பரவல் சமீபகாலமாக அதிகம் பரவுகிறது.
இந்த வைரஸ் பிற நோய் தொற்றுகளின் பாதிப்பினை அதிகரிக்க ஓர் காரணமாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு மாநிலத்தில் மட்டும் நேற்றைய(ஜன.,3)நிலவரப்படி, 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 178 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கம் பகுதியினை சேர்ந்த 42 வயதான நபர் கொரோனா பாதிப்பால் கடந்த 31ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நோய் தொற்று பாதிப்பானது அதிகளவில் இருந்த காரணத்தினால் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் சென்னைவாசிகள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
அதிர்ச்சி சம்பவம்
#BreakingNews | கொரோனாவுக்கு சென்னையில் ஒருவர் பலி#Coronavirus | #chennai | #corona | #NewsTamil24x7 | #CoronaDeath pic.twitter.com/Kgh5L4Sc4k
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) January 4, 2024