NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
    சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

    சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

    எழுதியவர் Nivetha P
    Apr 09, 2023
    10:42 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று சிறந்த இதழியலாளருக்கு கொடுக்கப்படும் கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி ஒரு சிறந்த இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது' என்பதை வழங்கி கவுரவிக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தற்போது 2022ம் ஆண்டின் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இந்தவிருதில் ரூ.5 லட்சமும், பாராட்டு சான்றிதழும் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இந்த விருதிற்கான தகுதிகள் குறித்தும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விருதிற்கு விண்ணப்பிப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தொடர்ந்த பணிபுரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    விரிவான விவரங்கள் தேவை

    விண்ணப்பதாரர்கள் பத்திரிகை தொழிலினையே முழுநேர பணியாக செய்திருக்க வேண்டும்

    மேலும் இதழியல் துறையில் சமூக மேம்பாடு, விளிம்புநிலை மக்களின் மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவைகளுக்காகவும் பங்காற்றியிருக்க வேண்டும்.

    இவர்களுடைய எழுத்து வரிகள் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

    இந்த விண்ணப்பதாரர்கள் பத்திரிகை தொழிலினையே முழுநேர பணியாக செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, விருதிற்கான விண்ணப்பதாரர் மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ, அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரிலோ, நேரடியாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.

    இதற்காக தேர்வு குழு ஒன்றினை அரசு நியமித்துள்ளது. அந்த குழு எடுக்கும் முடிவே இறுதியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய தகுதியுடையோர் விரிவான தனது விவரங்கள், அதற்கான ஆவணங்களுடன் இயக்குனர், செய்தி மக்கள் தொடர்பு துறை, சென்னை-600 009 என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    கருணாநிதி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழக அரசு

    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் மாநிலங்கள்
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? தமிழ்நாடு
    ரூ.25.14 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' - தமிழக அரசாணை பிறப்பிப்பு தமிழ்நாடு
    கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு - அடுத்த மாதம் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மெரினா

    கருணாநிதி

    சென்னையில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்து கேட்புக்கூட்டத்தில் சீமான் எச்சரிக்கை மெரினா கடற்கரை
    தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல் தமிழக அரசு
    பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப்பணித்துறை மனு தாக்கல் தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025