NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேசிய மருத்துவர் தின கொண்டாட்டம் - தமிழக முதல்வர் வாழ்த்து 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேசிய மருத்துவர் தின கொண்டாட்டம் - தமிழக முதல்வர் வாழ்த்து 
    தேசிய மருத்துவர் தினம் கொண்டாட்டம் - தமிழக முதல்வர் வாழ்த்து

    தேசிய மருத்துவர் தின கொண்டாட்டம் - தமிழக முதல்வர் வாழ்த்து 

    எழுதியவர் Nivetha P
    Jul 01, 2023
    01:46 pm

    செய்தி முன்னோட்டம்

    சுதந்திர போராட்ட வீரரும் மேதையுயான டாக்டர் பிதான் சந்திர ராயின் பிறந்தநாள் ஜூலை.,1ம் தேதி கொண்டப்படுகிறது.

    மேற்கு வங்காள மாநிலத்தின் 2ம் முதல்வராக பதவிவகித்த இவர் தனது 80வது வயதில் மரணமடைந்தார்.

    இவரது பிறந்தநாளினை தான் நாம் ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடி வருகிறோம்.

    அதன்படி இந்தாண்டும் நாடு முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"தன்னலம் கருதாமல் உலகத்திலுள்ள உயிர்களின் உடல்நலனும், உள்ளநலனையும் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள். மருத்துவர்கள் நலனுக்கு தேவையான அனைத்தையும் திமுக அரசு நிச்சயம் செய்துத்தரும்" என்று தெரிவித்துள்ளார்.

    மருத்துவர் தினம் 

    மருத்துவ முகாமில் இலவச மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளல் 

    இதனை தொடர்ந்து, மருத்துவர்கள் தினத்தினை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கன்னேரிமுக்கு என்னும் கிராமத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த முகாமினை சுகாதாரத்துறை இணை இயக்குனரின் நேர்முக உதவியாளரான மகேந்திரன் மற்றும் மருத்துவ அலுவலர் ராஜேஷ் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், சித்த மருத்துவம், இசிஜி ஸ்கேன், கண் பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் என அனைத்தும் இலவசமாக அளிக்கப்பட்ட நிலையில், ஏராளமான மக்கள் இந்த முகாமினை பயன்படுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிறந்தநாள்
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    கொலராடோ தாக்குதலைத் தொடர்ந்து, 12 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தார் டிரம்ப்  அமெரிக்கா
    இந்தியாவில் மின்சார வாகனங்கள் விரைவில் விலை உயரக்கூடும். என்ன காரணம்? மின்சார வாகனம்
    வெறுங்காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா? ஆரோக்கியம்
    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு

    பிறந்தநாள்

    31வது பிறந்தநாளை கொண்டாடும் கே.எல்.ராகுலின் வியக்க வைக்கும் சாதனைகள் கிரிக்கெட்
    பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் பிறந்தநாள்; அவரை பற்றி சில தகவல்கள்  கோலிவுட்
    இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனியின் 50வது பிறந்தநாள் இன்று தமிழ் திரைப்படங்கள்
    நடிகை சரண்யா பொன்வண்ணனின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவரின் நடிப்பை பறைசாற்றும் சில படங்கள் தமிழ் திரைப்படங்கள்

    மு.க ஸ்டாலின்

    மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்  பள்ளி மாணவர்கள்
    ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படாது - அமைச்சர் மா.சுப்ரமணியம்  தமிழக அரசு
    விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் - 12 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி சிபிசிஐடி
    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025