Loading...
52 முக்கிய கோயில்களில் இன்று முதல் செல்போன் தடை அமல்; கேமரா இல்லாத போன்களுக்கு தடையில்லை
52 முக்கிய கோயில்களில் இன்று முதல் செல்போன் தடை அமல்

52 முக்கிய கோயில்களில் இன்று முதல் செல்போன் தடை அமல்; கேமரா இல்லாத போன்களுக்கு தடையில்லை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 01, 2026
12:11 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் 52 முதுநிலைத் திருக்கோயில்களில் பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்வதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. கோயில் பிரகாரங்கள் மற்றும் சுவாமி சிலைகளுக்கு முன்னதாக ரீல்ஸ், செஃல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதைத் தடுக்கவும், கோயில்களின் புனிதத்தன்மையை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது மொபைல் போன்களைப் பாதுகாப்பாக வைக்கக் கோயில் வளாகத்திலேயே ₹5 கட்டணத்தில் பாதுகாப்பு லாக்கர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் ஏற்கனவே இந்தத் தடை நடைமுறையில் உள்ளது.

விளக்கம்

"சாதாரண போன்களுக்குத் தடையில்லை"

"நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், அமைதியான ஆன்மிக வழிபாட்டுச் சூழலை உருவாக்கவும் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கேமரா வசதி கொண்ட மொபைல் போன்களை வாகனங்களிலோ அல்லது அறைகளிலோ வைத்துவிட்டு வர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்"

"புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத சாதாரண பட்டன் மொபைல் போன்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது. அவசரத் தேவைகளுக்குக் கோயில் அலுவலர்கள் உதவிகள் செய்வார்கள்." என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT