சட்டசபைக்குள் செல்போனுக்கு அனுமதியில்லை! அமைச்சர் ஷாஜகானைக் கண்டித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்; பேரவையில் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, சட்டமன்ற அவைக்குள் செல்போன் கொண்டு வந்து அதைப் பார்த்து படித்த அமைச்சர் ஷாஜகானை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பகிரங்கமாகக் கண்டித்தார். "சட்டசபைக்குள் யாரும் செல்போன் கொண்டு வர அனுமதி இல்லை. அதனைப் பார்த்து படிப்பதற்கும் அனுமதி கிடையாது." என சபாநாயகர் கண்டிப்புடன் அறிவுறுத்தியதால் சட்டமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
தனித்தீர்மானம்
தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த முதலமைச்சரின் தனித்தீர்மானம்
முன்னதாக, அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மையாகப் பாடப்பட வேண்டும் என்ற தனித்தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்து முதலமைச்சர் விஜய் பேசினார்.
"தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல, அது நமது உயிர் மற்றும் உணர்வு.
தாய் எப்படிப் புனிதமோ, அதேபோல் தாய்மொழியும் புனிதமானது. தமிழ்த்தாய் வாழ்த்து உலகையே உயர்த்திப் பிடிக்கிறது." எனத் தெரிவித்த முதலமைச்சரின் தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்தன.
சபாநாயகர் உத்தரவு
அனைத்துக் கட்சிகளின் ஆதரவும் சபாநாயகரின் உத்தரவும்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே அமைச்சர் ஷாஜகான் செல்போனை பார்த்துப் படித்தார்.
அவையின் விதிகளை சுட்டிக்காட்டி சபாநாயகர் உடனடியாகத் தலையிட்டு எச்சரித்ததால், அமைச்சர் தனது செல்போனை உடனடியாகக் கீழே வைத்தார்.
இந்தச் சம்பவத்தால் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களிடையே சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.