LOADING...
பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி: இந்தியாவின் முதல் தேசிய கொள்கை 'PRAHAAR' வெளியீடு
இந்தியாவின் முதல் தேசிய கொள்கை 'PRAHAAR' வெளியீடு

பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி: இந்தியாவின் முதல் தேசிய கொள்கை 'PRAHAAR' வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 23, 2026
05:27 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாடு முழுவதும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான முதல் விரிவான கொள்கையான 'பிரகார்' (PRAHAAR)-ஐ மத்திய அரசு இறுதி செய்துள்ளது. பயங்கரவாத செயல்களை தடுப்பது மற்றும் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்கான ஒரு பொதுவான வழிகாட்டுதலை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குவதே இந்த கொள்கையின் முதன்மை நோக்கமாகும். மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இக்கொள்கை, நவீனகால பாதுகாப்பு சவால்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் காவல் நிலையங்கள் முதல் தேசிய புலனாய்வு அமைப்புகள் வரை ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், பயங்கரவாதச் செயல்கள் நடப்பதற்கு முன்பே அவற்றைக் கண்டறிந்து முறியடிப்பதே 'பிரகார்' கொள்கையின் இலக்காகும்.

விவரங்கள்

இந்திய இளைஞர்களை பாதுகாக்கவும் பரிந்துரைகள்

PRAHAAR, குறிப்பாக, இணையம் வழியாக இளைஞர்களைத் தூண்டும் 'டிஜிட்டல் தீவிரவாதம்' (Digital Radicalisation), வெளிநாட்டு நிதியுதவியுடன் செயல்படும் மதமாற்ற அமைப்புகள் மற்றும் எல்லை தாண்டிய ஊடுருவல்கள் போன்ற சிக்கல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்திய-நேபாள எல்லையில் நிலவும் பாதுகாப்புக் குறைபாடுகளை பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க புதிய கண்காணிப்பு முறைகள் மற்றும் 'நாட்கிரிட்' (NATGRID) போன்ற தரவுத் தளங்களை மாநில காவல்துறையினருடன் ஒருங்கிணைக்க இக்கொள்கை வழிவகை செய்கிறது. இதற்கு முன்னதாக இடதுசாரி தீவிரவாதத்தை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட கொள்கையை போலவே, இதுவும் நாடு தழுவிய அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement