மகளிர் உரிமைத்தொகை திட்டம் - காஞ்சிபுரத்தில் துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் செப்டம்பர் 15ம்தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முன்னதாக கூறியிருந்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் இத்திட்டத்திற்கான 50லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இதுவரை சென்னையில் 5 லட்ச விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 28ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவுச்செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் மேலும் பல விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 15ம்தேதி காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை துவக்கி வைக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று இத்திட்டம் துவங்கப்படவுள்ள நிலையில், இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
புதிய நல திட்டம்
#JUSTIN || வரும் செப்டம்பர் 15ம் தேதி கலைஞர்
— Thanthi TV (@ThanthiTV) August 1, 2023
மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம்
காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின் #MKStalin #kalignar #DMK pic.twitter.com/QsfBdeJ7EW